நுவரெலியா ஹட்டன் நேர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில், சிறுத்தை புலி குட்டியை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்றைய தினம் ஹட்டன் நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த தோட்ட குடியிருப்பு பகுதியை சோதனையிட்டபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேடுதல் நடவடிக்கையின்போது புலிக்குட்டியின் தலை, நான்கு கால்கள் உட்பட ஒரு தொகை இறைச்சியை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், ஏனைய இறைச்சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Previous articleவிபத்தில் இளைஞன் பலி
Next article97 கிலோ மாட்டிறைச்சி அழிப்பு!