சிரியா நாட்டில் தீவிரவாதிகளை தாக்குவதற்காக அந்நாட்டின் இராணும் நிகழ்த்திய வான்தாக்குதலில் 5 சிறுவர்கள் உள்பட பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் தீவிரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவர்கள் கைவசம் உள்ள நகரங்களை மீட்க அந்நாட்டு இராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரமலான் பண்டிகையின் போது இத்லிப் மாகாணத்தில் அரசு படைகள் வான்தாக்குதலில் ஈடுபட்டன. அப்போது அங்குள்ள காபர் அவித் நகரில் போர் விமானங்களின் தாக்குதலில், 5 சிறுவர்கள் உள்பட பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல் மாரட் அல் நுமான் நகரில் குண்டு பொழிந்ததில், ஒரு இளம் பெண் மற்றும் 2 குழந்தைகள் பலியாகினர்.(ம)