அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட -16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் உள்ள வறிய மாணவர்கள் தொடர்ந்தும் பாடசாலை கல்வியை தொடரும் நோக்கிலும் இடைவிலகளை தடுக்கும் நோக்கிலும் ”சியபத் சுரெக்கும்” எனும் திட்டத்தின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக பொத்துவில் பிரதேச செயலகத்தினால் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு இன்று காலை 14ந் திகதி பிரதேச செயலக கணக்காளர் ஏ.வி.ஏ. ரகுமான் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் இதன் போது தொரிவு செய்யப்பட்ட சுமார் 15 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.வி.ஏ.ரகுமான்,மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆர்.ஜெகநாதன், நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சுவைர், கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாணவர்கள் பெற்யோர்கள் என பலரும் கலந்த கொண்டு இருந்தனர்.(சே)
.











