15ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகள் இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றனது

இந்த தொடரின் இரண்டாவது ஆரம்ப சுற்றின் போட்டிகள் நேற்று இடம்பெற்றன.

சிங்கப்பூருக்கு எதிரான இந்த போட்டியில் இலங்கை 88-50 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

ஏற்கனவே இலங்கை அணி சிம்பாப்வே, வடக்கு அயர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தோல்வி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சார்பாக தர்ஜினி சிவலிங்கம் 78 இல் 76 கோல்களை வெற்றிகரமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்த தொடரில் இதுவரையில் இதுவே சிறந்த தனிநபர் புள்ளியாக இருக்கிறது.

இன்றையதினம் இலங்கை அணி சமோவா அணியுடன் மோதவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.(சே)

Previous articleவவுனியாவில் வீதிகள் திருத்தப்படும்!:சிவசக்தி ஆனந்தன் (Video)
Next articleஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா (Video)