ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் புதிய சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் வைபவம் இன்று காலை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குள் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 1185 பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வியஜகலா மகேஸ்வரன் பிரதம வருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான சமுர்த்திப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் பிரதிநிதி சட்டத்தரணி கேசவன் சயந்தன் மற்றும் சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் மற்றும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.(மா)

Previous articleஅதிபரை நியமிக்க வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்!
Next articleகண்ணகிபுரம் முருகன் மலை கோவிலை புனருத்தாரனம் செய்து தருமாறு கிராமவாசிகள் கேரிக்கை