முல்லைத்தீவு துணுக்காய் வலயத்திற்குட்பட்ட தொண்டர் ஆசிரியர்கள், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிகந்தராஜாவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சத்தியசீலனின் ஏற்பாட்டில், ஒட்டுசுட்டான் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றள்ளது.

நீண்ட காலமாக வேதனமின்றி பாடசாலைகளில் கல்வி கற்பித்துவந்த தொண்டர் ஆசிரியர்கள், நிரந்தர நியமனம்கோரி பல தடவைகள் போராட்டத்தில் ஈடுபட்டு தோல்வியில் முடிவடைந்த நிலையில், நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீறிகந்தராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி, தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வுகள் எட்டப்படும் என உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleஹட்டன்-கண்டி வீதியில் விபத்து:இருவர் படுகாயம்!
Next articleதொழில்நுட்பகூடம் திறந்து வைப்பு!