கைது செய்யப்பட்டிருக்கும் சஹ்ரானின் நெருங்கிய நண்பர் குறித்த புலனாய்வு விசாரணைகள் நிறைவுற்றதும் அவரை வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
வெளிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து பொலிஸார் வெளிமடை பகுதியின் சில்மியாபுர என்ற இடத்தில் வைத்து சாகுல் தம்பி ஹிஸ்புல்லா என்ற 22 வயது நபரை கடந்த 16 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
சஹ்ரானின் நெருங்கிய நண்பராக இருந்து வந்த கைது செய்யப்பட்ட குறித்த நபர் மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் தொடர்புபட்டவரென்றும் இஸ்லாமிய ராஜ்யத்தை உருவாக்கும் வகையில் ஸஹ்ரானால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வு பலவற்றில் கைது செய்யப்பட்ட நபர் கலந்து கொண்டிருந்தவரென்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(சே)






