பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசில் பகுதியில் வால்கர் ரயில் நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வால்கர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் எதிர்திசையில் வந்த பயணிகள் ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பப்பட்டிருந்த தண்டவாளத்தில் பயணிகள் ரயிலும் தவறுதலாக பயணித்ததால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் ஒரு பெண், 8 ஆண்கள் உள்பட 11 பயணிகள் பலியாகுயுள்ளனர். 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.(சே)

 

Previous articleவவூனியாவில் புகையிரத கடவை காப்பாளர்கள் போராட்டத்தில் 
Next articleஅரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது -வியாழேந்திரன்