திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூனித்தீவு பகுதியில் உள்ள கடற்கரைய அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 61 டெட்டனேட்டர் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பூர் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் கருசிங்கவின் ஆலோசணையின் பேரில் டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பூர் பொலிஸ் உதவி பொலிஸ் பரிசோதகர் கிறிசாந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று இரவு 11.00 மணியளவில் சோதனை மேற்கொண்டிருந்த போதே இவ் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துனர்.

இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், குறித்த வெடி பொருட்கள் எதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து சம்பூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (நி)

Previous articleபிரிட்டன் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது!
Next articleகல்முனை பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்பு!