நாட்டுக்காக ஒன்றினைவோம் எனும் தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக சமூர்த்தி திரியபியச வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடற்ற குடும்பத்திற்கான புதிய வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் பொத்துவில் 06 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலக சமூர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம்  தலைமையில் இன்று  இடம்பெற்றது. நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயயலாளர் ஆர்.திரவியராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய வீட்டுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

பொத்துவில் 06 கிராம உத்தியோகத்தர் பிரிவில் மிக நீண்ட காலமாக வீடு இல்லாது ஓலைக் குடிசையில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்கான இரண்டு அறைகளைக் கொண்ட நிரந்தர வீடு ஒன்றினை சமூர்த்தி திரியபியச வீடமைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

இப் புதிய வீட்டினை நிர்மாணிப்பதற்காக சுமார் இரண்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில்  அமைச்சர் தயாகமகே அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் வை.எல்.நியாஸ், பொத்துவில் 06 கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டு புதிய வீட்டுக்கான அடிக் கல்லினை நாட்டி வைத்தனர்.(சி)

 

Previous articleசம்பினானது கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா ஜெகன் கழகம்!
Next articleஇலத்திரனியல் தேர்தல் பிரசார கருத்தமர்வு