சமூகத்தின் மத்தியில் காணப்படும் இனவாத முரண்பாடுகள் தீர்க்கப்பட்டால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னேற முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இராணுவ வீரர் அசலக காமினியின் 28 ஆவது வருட நினைவு தின நிகழ்வு சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காலனித்துவ ஆட்சியில் இருந்து எமக்கு இலகுவாக சுதந்திரம் கிடைத்தமையின் காரணமாகவே சுதந்தரத்தின் மதிப்பினை பெரும்பாலும் மக்கள் அறிந்து கொள்ளவில்லை. பாரிய போராட்டத்தின் மத்தியில் சுதந்திரம் அடைந்த நாடுகள் இன்று அனைத்து துறையிலும் முன்னேற்றமடைந்துள்ளது.

சமூகத்தின் மத்தியில் காணப்படும் இனவாத முரன்பாடுகளை முழுமையாக இல்லாதொழித்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் நாம் முன்னேற்றமடைய முடியும். பல்வேறு தேவையற்ற காரணிகளுக்கு மாத்திரமே மக்கள் முக்கியத்துவம் வழங்குகின்றார்கள். ஜனநாயகத்தை தேர்தலில் வாக்களிப்பதால் மாத்திரம் உறுதிப்படுத்த முடியாது என்றார்.(சே)

Previous articleஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 மில்லியன் ரூபா இழப்பீடு
Next articleமக்கள் விடுதலை முன்னணி ஆட்சியமைக்க முடியுமா? : முஜிபுர்