தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செயலரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலருமான சமன் திஸாநாயக்க தாக்கல் செய்த முன் பிணை கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிரகாரித்துள்ளது.

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கில் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரம் தொடர்பாக, சமன் திஸாநாயக்க உள்ளிட்ட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவாகரத்தில் தன்னை கைதுசெய்வதை தடுக்க, சமன் திஸாநாயக்கவினால் தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை இன்று கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க நிராகரித்துள்ளார். (நி)

 

Previous articleபாணின் விலை 05 ரூபாவால் அதிகரிப்பு!
Next articleரீட் மனு ஒத்திவைப்பு!