யாழ்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன்போது சாட்சியம் வழங்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார் ஆனால் அவர் மன்றில் முன்னிலையாகாததால் வழக்கு செப்டம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவை அன்றைய தினம் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும் வகையில் அவருக்கு மீளவும் அறிவித்தல் வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது….(சே)








