முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான வழக்கை  நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தில்  விசாரணை செய்வதற்கு உயர்நீதிமன்றம்  தடை விதித்துள்ளது.

டீஏ ராஜபக்ச அருங்காட்சியகம் தொடர்பான வழக்கை ஒக்டோபர் முதலாம் திகதி வரை நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தில்  விசாரணை செய்வதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்திற்கு குறிப்பிட்ட வழக்கை விசாரணை செய்வதற்கான அதிகாரம் உள்ளதா என கோரி கோத்தபாய ராஜபக்ச தரப்பினர் சமர்ப்பித்துள்ள மனுமீதான விசாரணை முடிவடையும் வரை இந்த தடையை விதிப்பதாக மேல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.(சே)

Previous article1001 துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் திட்டம்!
Next articleசீனாவில் மண்சரிவு பலர் மரணம்