கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
அசல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு அழைக்கப்பட்டுள்ளது. 
இதன்போது இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.(சே)






