கொழும்பு – கொஹுவல ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இனந்தெரியாத இருவர் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிசூட்டில் காயமடைந்த இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய நபர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வாகனத்தின் சாரதியான உடுஹமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ரணவக்க சுசில் ருவன் பெரேரா என்பவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (நி)

Previous articleகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க சர்வதேசம் உதவ வேண்டும்!(காணொளி இணைப்பு)
Next articleஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அநுராதபுர மக்கள் ஆதரவு!