புதிய ஒமிக்ரோன் திரிபு பரவல் காரணமாக, செல்வந்த நாடுகள், கொவிட் தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு, உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.
ஒமிக்ரோன் திரிபு பரவல் காரணமாக, சில செல்வந்த நாடுகள், செயலூக்கி தடுப்பூசி ஏற்றலைத் துரிதப்படுத்துகின்றன.
பெருமளவில் மக்களுக்கு இதுவரையில் தடுப்பூசி செலுத்தாதுள்ள நாடுகளுக்கான விநியோகத்தில் இது தாக்கம் செலுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் nதிவித்துள்ளார்.
புதிய ஒமிக்ரொன் திரிபிலிருந்து பாதுகாப்பு பெற, மேலதிக கொவிட் தடுப்பூசி அவசியமா? என்பது இதுவரையில் தெளிவாகத் தெரியவில்லை.
எனவே, செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.
இதேவேளை ஒமிக்ரோன் வைரஸ் 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
உருமாறிய ஒமிக்ரோன் பரவல் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ஒமிக்ரோன் கண்டறியப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் ஒமிக்ரோன் பாதிப்புகளால் ஏற்பட்ட இறப்புகள் இதுவரை பதிவாகவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
ஒமிக்ரான் பரவல் தீவிர உடல் நல பாதிப்பை ஏற்படுத்துகிறதா, அதற்கான சிகிச்சை எந்தளவுக்கு பயன் தருகிறது, தடுப்பூசி எந்தளவுக்கு செயல்படுகிறது என்பதை குறித்து அறிய கூடுதல் காலமாகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதை தவிர்க்கவும்!
