ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவுக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.


அங்கு, காணி விடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர்சந்தித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில், கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பாக குறித்த குழுவினரால் கேட்டறியப்பட்டது.

கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் தம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட நிலையில், தாம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தின் நியாயப்பாடு, போராட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, குறித்த குழுவினருக்கு விளக்கியதாகத் தெரிவித்தனர்.

மேலும் தமது பிரச்சினைக்கு, அவர்களால் உடனடியாக தீர்வு சொல்ல முடியாத நிலையிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், அமைப்புகளுடனும் கலந்துரையாடி தமக்குரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு தாம் உறுதுணையாக இருப்போம் என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் கூறியதாக மக்கள் தெரிவித்தனர். (சி)

Previous articleமுதுகுப்பக்கமாக பாய்ந்து இதயத்தை தாக்கிய குண்டு : மருத்துவ அறிக்கையில் தகவல்
Next articleதபால் தொழிற்சங்க போராட்ட ஆரம்பம் !!