நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வாக்களிக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் நடுநிலை வகிக்க வேண்டும். இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளதாக, கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து, அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைகள் ஈழத் தமிழ் மக்கள் சார்பிலே இருந்த பொழுதும் கூட, இன்னமும் எஞ்சியிருக்கக் கூடிய காலத்திலே ஒரு சில விடயங்களையாவது ஆற்றியிருப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற ஒரு சில மக்களுடைய எதிர்பார்ப்பையும் ஈடு செய்யக் கூடிய விதத்திலே, இந்த பிரேரனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் நடுநிலை வகிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் குழு தீர்மானதித்துள்ளதாக, கட்சியின் தலைவரும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அவ்வாறு நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் பாராமன்ற உறுப்பினர்கள் எடுக்காமல் அரசைக் காப்பாற்றும் வகையில் அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களாயின் மக்கள் மத்தியிலிருந்த கூட்டமைப்பு தூக்கி வீசப்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் யாழிலுள்ள அலுவலகத்தில் நேற்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தாரி.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.. மக்கள் விடுதலை முன்னயினால் அரசிற்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனை மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது.

இந்தச் சூழ் நிலையிலே தமிழ் மக்கள் உட்பட முழு நாடும் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவு என்ன என்பதை அறிவதற்கு மிகப் பெரிய அளவிலே ஆவலாக இருந்த கொண்டிருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையின் பின்னணியிலே தான் இதுவரை 2015 ஆம் ஆண்டிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் என்று ஐனாதிபதித் தேர்தலிலலும், அதனைத் தொடர்ந்து பாராமளுன்றத் தேர்தலிலும், அதன் பின்னர் அரசிற்கு கூட்டமைப்பு அளித்து வந்த ஆதரவையும், அதைப் போல கடந்தாண்டு ஒக்ரோபர் மாதத்தில் நடந்த சதிப் புரட்சியின் பின்னரும் கூட மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வருவதற்கு கூட்டமைப்பின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமாக இருந்தது.

இந்தச் சூழலின் பின்னரும் கூட கடந்த ஏழு மாதங்களாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்களிலே மிகப் பெரிய அளவிலே எதுவும் நடக்காத ஒரு ஏமாற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சனை, காணிகள் விடுவிப்பு, இரானுவ முகாம்கள் குறைப்பு, இதைப் போல அரசியல் தீர்வு. அது இப்போது இல்லையென்று ஆகிவிட்ட சூழ்நிலையிலே சில அத்தியாவசியமான தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாதென்று உதாரணமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிதி காணி அதிகாரத்தை வழங்கக்கூட ஏமாற்றுகின்ற அரசாங்கத்தை முண்டு கொடுத்த காப்பாற்றக் கூடாதென்ற உணர்வு எங்கள் மத்தியிலே கொந்தளிப்பாக இருப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

ஆந்த அடிப்படையிலே தான் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் குழு இன்று கூடி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனையிலே தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேர் கொண்ட பாராளுமன்றக் குழு என்ன செய்ய வேண்டுமென விவாதித்த பொழுது ஒருவர் கூட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு எதிராக வாக்களித்து அதாவது அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று சொல்லவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு காலமாக அரசிற்கு ஆதரவைக் கொடுத்தவிட்டு இப்பொது உடனடியாக எதிர்ப்பைக் காட்டுவது இன்னும் ஒரு சில மாதங்களிலே ஏதாவது சாதித்து இருக்க முடியுமா என்று என்னுபவர்களுக்கும் இன்னொரு விதத்திலே நாங்கள் உங்களை ஆதரிக்க மறுக்கின்றோம் உங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை என்று எண்னும் விதத்திலே இந்த வாக்கெடுப்பிலே கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டுமென கூட்டமைப்பில் இருக்கக் கூடிய ரெலோவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுகக்கின்றோம்.

எங்களுடைய கோரிக்கையை நீங்கள் பரிசீலனைக்கு எடுத்து தமிழ் மக்களின் அந்த விருப்பத்திற்கமைய சாதகமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் தொடர்ந்தும் அரசைக் காப்பாற்றுவதன் மூலம் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் இருந்து தூக்கி வீசப்படக் கூடிய ஆபத்து அபாயம் இருக்கின்றதென்பதையும் எச்சரிக்கையுடன் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

இது வேண்டுகோள் தான் ஏற்றுக் கொள்ளப்படலாம், ஏற்றுக்ககொள்ப்படலாமலும் விடலாம், ஆனால் இதனால் எழும் பிரதி பலன்களை கூட்டமைப்பும், மக்களும் அனுபவிக்க வேண்டி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு தான் நாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்தள்ளோம். ஆகவே நாளை எடுக்கப் போகும் தீர்க்கமான முடிவு எதிர்கால தமிழ் தேசிய அரசியலிலே பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை காலம் காட்டும் என்பது தான் எங்களுடைய கருத்து என்றார். (சி)

Previous articleஏப்ரல் 21 தாக்குதலில் சந்தேகம் – தயாசிறி
Next articleமுல்லைத்தீவில் விபத்து : 18 வயதுடைய இருவர் பலி