தமிழ் மக்களுக்கு, இலங்கை இராணுவமே பாதுகாப்பை வழங்கி வருகின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.
‘சொல்வதற்கு மிகவும் கவலையடைகிறேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், விசேடமாக தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இராணுவத்தை, பாடசாலைகளை பாதுகாப்பதற்கு அனுப்பியிருப்பதாக கூறியிருக்கின்றார்.
அத்தோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குப் பதிலாக கூட்டணி ஒன்றை அமைத்ததற்கான காரணம், அவர்கள், தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் அரசாங்கத்தின் செல்லப்பிளையாக மாறிவருவதனால் ஆகும் என்று, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். அதனால் மக்களை இராணுவம் பாதுகாத்தது.
தமிழ் மக்கள் இராணுவத்தை நேசிக்கின்றனர்.
அதேபோல வடக்கு கிழக்குப் பகுதிகளில் இராணுவம் இருப்பதை அங்குள்ள மக்கள் விரும்புகின்றனர்.
இதனிடையே மக்களிடமிருந்து பிரிந்திருக்கும் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் தமிழ் மக்களைப் பற்றி பேசுகின்றார்.
அதற்கு சிறந்த ஓர் உதாரணம்தான், தமிழ் மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் உதவியும் வழங்காத கூட்டமைப்பு அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக மாறிவருவதாகும்.
தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவே இராணுவம் செயற்படுகிறது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடினார்கள்.
எந்த நேரத்திலும் தமிழ் மக்களை இலக்கு வைத்து இராணுவம் போர் செய்யவில்லை.
போரில் ஏற்படும் சிறு நட்டங்களுடன்தான் இராணுவம் செயற்பட்டது.
எனினும் பாதுகாப்பு வழங்கி, பசில் ராஜபக்ச வடக்கு கிழக்குப் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தி செய்த போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பில்தான் இருந்தனர்.
போர் முடிந்த பின்னர்தான் அவர்கள் அங்கு திரும்பினர்.
எனினும் இன்று தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இனப்படுகொலையை இராணுவம் அரங்கேற்றியதாக கூறி வருகின்றனர்.
இருந்த போதிலும் கடந்த காலங்களில் இராணுவம் வழங்கிய பாதுகாப்பை மக்கள் அறிவார்கள்.
இதனை அறிந்த விக்னேஸ்வரன், தெற்கில் தமிழ்த் தலைமைகள் அரசாங்கத்துடன் கைகோர்த்த நிலையிலேயே எதிர்கூட்டணியை அமைத்திருப்பதாகக் கூறுகின்றார்.
வாக்கு வங்கியில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதால் தமிழ் மக்களை தூண்டிவிடுவதன் மூலம் வாக்குகளைப் பெற முடியுமா என்று முயற்சித்துப் பார்க்கின்றனர்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)






