அண்மைய காலங்களில் கைது செய்யப்பட்ட நிலையில் எந்தவித குற்றங்களும் சுமத்தப்படாத முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

நேற்று இரவு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்பில்லாத எவ்வித குற்றங்களும் நிருபிக்கப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம் அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க வேண்டாம் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.(சே)

Previous article238 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்சிகோ
Next articleLTTE உறுப்பினர்கள் யாரும் இராணுவத்திடம் சரணடையவில்லை