முல்லைத்தீவு – குமுழமுனை கற்பகப்பிள்ளையார் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று சிறப்பான இடம்பெற்றது.

அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் விநாயகர் உள்வீதி வலம் வந்து 9.00 தேரில் எழுந்தருளி 9.30 மணியளவில் இரத பவனி இடம்பெற்றது.

இரத பவனி ஆலய வெளி வீதியை சுற்றி இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து குமுழமுனை மகாவித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று காலை 11.30 மணியளவில் தேர் இருப்பிடத்தையடைந்தது.

நாளை தீர்த்தோற்சவம் இடம்பெற்று நாளை மறுதினம் பூங்ககாவனத்திருவிழாவுடன் குமுழமுனை கற்பகபிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழா நிறைவடையவுள்ளது. (நி)

  

Previous articleமைத்திரி அரசு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது:மனோ (காணொளி இணைப்பு)
Next articleகல்முனை விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு த.தே.கூவுக்கு ஏற்பட்டுள்ளது!