தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலய பங்கு மக்கள், இன்று மன்னார் மறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்த, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மக்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக, மக்களை பாதிப்புக்களில் இருந்து விடுவிக்கும் நோக்கில், ‘ஆற்றுப்படுத்தல்’ பயணமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கொழும்பு மறை மாவட்ட விசுவாசத்தைப் பரப்பும் அமைப்பின் பொறுப்பாளர் அருட்தந்தை பிரசாத் கர்ஸண் அடிகளாரின் வழிநடத்தலில், மன்னார் மறை மாவட்ட திருத்தலங்களை தரிசிக்க இரண்டு நாள் பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் மறை மாவட்டத்தின் மடுத்திருத்தலம், மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம், தோட்டவெளி மறை சாட்சிகளின் இராக்கினி ஆலயம் போன்ற தலங்களுக்குச் சென்று, இறை வழிபாட்டில் ஈடுபட்டதுடன், அப்பகுதி பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களுடனும் உரையாடலிலும் ஈடுபட்டனர். (சி)