அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி, சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தின் முன்பாக நடத்தப்பட்டுள்ளது.

இதில், பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன், பல சுலோகங்களையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில், தமழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள், சயமத் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள்.

அகிம்சையை போதிக்கின்ற புத்தருடை இந்த நாட்டிலே, இதுவரை சரியான தீர்வுகள் எமக்கு வழங்கப்படவில்லை. ஒரு நியாயமான கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படும் இந்த போராட்டத்தினை கவனத்தில் எடுக்காதது, ஏன் என்று இதுவரை தெரியவில்லை.

மக்களின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.அதற்கு எமது தமிழ் அரசியல்வாதிகள் மிக கரிசனையுடன் செயற்பட வேண்டும்.

1993ம் ஆண்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிரதேச செயலகம் இதுவரை தரமுயர்த்தப்படவில்லை, தமழர் உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கும் கிழக்கும் இணைந்து, இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதன் தொடக்கப் புள்ளியாக, இந்த போராட்டத்தை கருதுகின்றோம்.

பத்தாயிரத்துக்கும் குறைவானவர்கள் உள்ள பிரதேச செயலகங்கள், கடந்த 30 ஆண்டுகளிலே உருவாக்கம் பெற்றுள்ளன.

ஒரு குறிப்பிட்ட இனத்தின் அழுத்ததிற்காக, ஒரு பகுதி மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படட்டுள்ளது, கல்முனை வாழ் தமிழர்கள் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருகின்றார்கள்.


கிழக்குக்கு ஒன்று என்றால் வடக்கு கொந்தளிக்கும், ஒரு சில நாட்களில் கோரிக்கை நிறைவேறாவிட்டால் வடக்கு கிழக்கு உறவுப் பாலமாக பேரணியை நடாத்துவதற்கு சிந்திக்கின்றோம்.

இஸ்லாமிய உறவுகளே, நாம் எமது நீதியான கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருக்கும் போது எங்களுக்கு போட்டியாக நீங்கள் உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயற்படவும் இல்லை, குரல் கொடுக்கவும் இல்லை. என தமது ஆதங்கஙடகளை வெளிப்படுத்தினர்.(சி)

Previous articleதிருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்.
Next articleகல்முனை விவகாரம் : சங்கரி லண்டனில் இருந்து அறிக்கை