கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில், பொது மக்கள் பயன்படுத்தும் மலசலகூட சுகாதார சீர்கேடு தொடர்பில், பொது மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
வெளி நோயாளர் பிரிவில் உள்ள மலசலகூடங்கள் நிறைந்து வழிவதாகவும், பெண்கள் பயன்படுத்தும் மலசல கூடத்தில், சுகாதார துவாய்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய முறையில் கழிவு முகாமைத்துவம் பேணப்படாமையால், மக்கள் நாளாந்தம் அவதியுறுவதாகவும், நாள் ஒன்றுக்கு பல நூற்றுக்கணக்காண வெளிநோயாளர்கள் வைத்தியசாலைக்கு வருகை தருவதுடன், நோயாளர் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிடவும், பலர் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வைத்தியசாலை சேவையை பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்களுக்கு, இவ்வாறான நிலை காணப்படுகின்றமையால், சுகாதாரத்தை பேண முடியாதுள்ளதாக, மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று பதிவு செய்யப்பட்ட காட்சிகளளே இதுவென்பதுடன், சில காட்சிகள் அருவருப்பதாக இருப்பதனால், அவற்றை தவிர்த்துள்ளோம்.
இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வத்தியசாலையின் சுகாதாரம் தொடர்பில், அதிகாரிகள் பார்வையிடுவதில்லையா எனவும், பொது மக்களுக்கு சாதாரணமான விடயங்களுக்கு வழக்குகளை தொடரும் சுகாதாரப் பிரிவினர, வைத்தியசாலையின் சுகாதாரம் தொடர்பில் கண்டுகொள்ளாமை குறித்து, மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதனால், விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (சி)









