கிளிநொச்சி – ஜெயந்தி நகரில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி – ஜெயந்தி நகரிலுள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மகன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இருவரின் சடலங்களும் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

70 வயது மதிக்கத்தக்க விஸ்ணுகாந்தி வள்ளியம்மை மற்றும் அவரது மகனான 35 வயது மதிக்கத்தக்க லிங்கேஸ்வரன் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த இருவரின் சடலங்களும் காயங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுவதால், இந்த சம்பவம் கொலையாக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். (நி)

Previous articleஹட்டனில் குப்பைப் பிரச்சனை மக்கள் பாதிப்பு! (படங்கள் இணைப்பு)
Next articleபாகிஸ்தானில் விமான விபத்து:17 பேர் பலி!