கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, இயக்கச்சி, முகமாலை, தர்மக்கேணி, எழதுமட்டுவாழ், பகுதிகளில், சட்டத்திற்கு முரணாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

6 கனரக டிப்பர் வாகனங்கள், பளைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், 6 டிப்பர் வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில், பளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது
Next articleபுளொட் அமைப்பின் பேராளர் மாநாடு வவுனியாவில்!