உபாய முறை மூலோபாயத்திட்டம் எனும் செயலமர்வு, தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி தொழில் பயிற்சி நிலைய ஒன்றுகூடல் மண்டபத்தில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
தேர்தல் முறைமைகளை மாற்றியமைப்பதற்கான கருத்துக்கள் சேகரிக்கும் வேலைத்திட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகள், தேர்தல் கண்காணிப்பு குழுக்கள், இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கள், முதியோர் அமைப்புகள், கிளிநொச்சி மாவட்ட ஊடக அமையத்தின் ஊடகவியலாளர்கள் என, பலதரப்பட்டவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு, இவ்வாறான கருத்துக்கள், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலாளர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிளிநொச்சி ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சியில் உபாய முறை மூலோபாயத் திட்ட செயலமர்வு!
