மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள 10 வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளன.

இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் இடிந்த பகுதியில் ஒருவர் சிக்குண்டு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

நில தாழிறக்கம் குறித்து கட்டட ஆராச்சி நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களை அவதானதுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. (நி)

 

Previous articleசடலத்தை தேடி தொடர் நடவடிக்கை
Next articleவெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு!(படங்கள் இணைப்பு)