காலி, கரன்தெனிய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கெகிரிஸ்கந்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உயிரிழந்த இடத்தில் மின்சார கம்பிகள் இருந்ததாகவும் பன்றி வேட்டைக்காக குறித்த மின்சார கம்பிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கரன்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(சி)

Previous articleகாவிகளின் பலத்துடன் இந்த நாட்டை வெற்றி பெற செய்வோம் : ஞானசார தேரர்
Next articleஅப்துல்லாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு