கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான காலஅவகாசத்தினை ஏற்கமுடியாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கல்முனையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திப்பதற்காக சென்ற அமைச்சர்களான மனோ கணேசன் தயாகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன் ஆகியோரிடம் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். கல்முனை பிரதேச செயலக சர்ச்சைக்கு முடிவு காண மூன்று மாத கால அவகாசம் வேண்டும் என அமைச்சர்கள் போராட்டக்காரர்களிடம் வேண்டிக் கொண்டனர் ஆயினும் அதனை மறுதலித்த போராட்டக்காரர்கள் காலஅவகாசமும் வேண்டாம் கூட்டமைப்பும் வேண்டாம் எனத் தெரிவித்து போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர மறுப்புத் தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள் வருவதாக செய்தி பரவியதனை அடுத்து பெருந்திரளான மக்கள் போராட்டம் நடைபெறும் பகுதியில் கூடியிருந்தனர்.

Previous articleகோட்டாவுக்கு யாழ் நீதிமன்றி அழைப்பாணை
Next articleவிமலுக்கு-ரிஷாத் பகிரங்க சவால்!!(video இணைப்பு)