தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான காரில் பயணித்த 39 வயதுடைய தந்தையும், 04 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துச் சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் விபத்தில் தந்தை – மகள் பலி:மூவர் காயம்!
