மட்டக்களப்பு காத்தான்குடி அல்மனார் ஜும்ஆப்பள்ளிவாசல் வளகாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று காலை இடம் பெற்றது.
பெருநாள் தொழுகையினை பள்ளிவாயல் இமாம் ஏ.பி.மசூத் பலாஹி நடாத்தி வைத்தார். பெருநாள் ஜும்ஆப்பிரசங்கத்தை அஷ்ஷெயக் எம்.மன்சூர் மதனி நிகழ்த்தினார்.
ஆண்கள் பெண்கள் என பெருந்திரளான பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
இம்முறை காத்தான்குடி கடற்கரையில் பெருநாள் தொழுகை நடாத்துவதற்கு நாட்டின் தற்போதைய சூழ் நிலையை கருத்திற் கொண்டு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.