ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு வளங்களை விற்பனை செய்கின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
காணி திருத்தச்சட்ட மூலம் வெற்றி பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
மக்களுக்கு நன்மை புரிவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து தேசிய வளங்களை பிற நாடுகளுக்கு விற்கும் சூழ்ச்சியினையே முன்னெடுக்கின்றது.
விசேட காணி திருத்தச்சட்ட மூலம் நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு எதிராக பல மனுக்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இந்த சட்டமூலத்தை ஒருபோதும் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது.
ஒருபோதும் இந்த சட்டம் வெற்றி பெறுவதற்கு இடமளிக்க முடியாது.
என குறிப்பிட்டுள்ளார். (சி)






