காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடித்து தரக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், சர்வதேசத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையிலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக, இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவினர் இணைந்து ஏற்பாடு செய்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்ட, கடத்தப்பட்டவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் இணைந்து கொண்டனர்.
இதன் போது, மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சர்வ மத தலைவர்கள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உட்பட மன்னார் நகர சபை உப தலைவர், உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து, மகஜர் வாசிக்கப்பட்டதுடன், மன்னார் மாவட்ட செயலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. (சி)