
உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்திலிருந்து குமண காட்டு வழிப்பாதையினூடான காதிர்காம பாதயாத்திரையானது ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் இன்று காலை ஆரம்பமானது.
நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு அரசகருமமொழிகள் சமூகமுன்னேற்ற, மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ மனோகணேசன், அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் பாதை திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் வருடந்தோறும் நாட்டின் நாலா பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான இந்து பௌத்த அடியவர்கள் வருகை தருவதுடன் கதிர்காம யாத்திரிகர்களும் இங்கிருந்து குமண காட்டு வழிப்பாதையூடாக கதிர்காம பாதயாத்திரையினை மேற்கொள்வதும் சிறப்பம்சமாகும்.
குமண காட்டுவழிப்பாதையானது இன்று 27 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 09 ஆம் திகதி மூடப்படும் என அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் குறிப்பிட்டார்.
அத்தோடு பாதயாத்திகர்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.














