களனி கங்கைக்கு அண்மித்து கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

லக்ஷ்பான நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட உள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் பெய்து வருகின்ற அதிக மழை காரணமாக லக்ஷ்பான நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட உள்ளன.(சே)

Previous articleகாலை 8 மணி முதல் 18 மணி நேர நீர்வெட்டு
Next articleவேள்வித் தடையை உயர் நீதி மன்றம் நீக்கியது!