நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததன் மூலம், கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமையின் மூலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியினரால், அரசாங்கத்துக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமையினால் 27 மேலதிக வாக்குகளினால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. (நி)









