கல்முனை வடக்கு தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகப் பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினரால் இன்று(2019-05-12) புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் பிரதேச செயலாளர் தியாகராஜா அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.

சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம், சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கே.தியாகராஜா, சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், என்சுவாசம் மெல்லத்தேயும், மது வெறி என் தலைக்கு ஏறினால் நானும் என் குடும்பமும் தலை கீழாக மாறும், இளமை இனிமையானது, புதுமையானது மதுவினால் அதை இழந்து விடாதே, நான் விடும் புகை எனக்கே எமன் என்ற விழிப்புணர்வு பதாதைகளை தாங்கியிருந்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பித்த ஊர்வலம் கல்முனை பிரதான வீதிவரை சென்று பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

Previous articleசிசிர மெண்டிஸ் ராஜினாமாவில் சந்தேகம்-மனுஷ நாணயக்கார
Next articleஅம்பாறையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!