கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி கல்முனை பொலிஸ் நிலைய வீதியில் முஸ்லிம் பிரதிநிதிகள் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி, கல்முனையில்
பௌத்த மதகுரு, இந்து மத குருமார்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதி ஆகியோர் இணைந்து இன்று 4 ஆவது நாளாகவும் உண்ணாவிரம் இருந்துவரும் நிலையிலேயே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கூடாது என வலியுறுத்தி முஸ்லிம் பிரதிநிகள் இன்று போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு, நேற்றைய தினம், கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று முஸ்லிம்களின் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (நி)
















