கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது.

கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பிரியந்த தலைமையில் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.அணிவகுப்பு மரியாதையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடைகள், விடுதிகள், அலுவலகங்களை பார்வையிட்டதுடன் பொலிஸ் நிலையத்திலுள்ள வாகானங்களின் நிலையையும் பரிசோதித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை சவளக்கடை சம்மாந்துறை அக்கரைப்பற்று பிராந்தியங்களுக்கான பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பி ஹேரத்தும் இணைந்திருந்தார். (நி)

Previous articleசம்பூரில் டெட்டனேட்டர்கள் மீட்பு!
Next articleஅறநெறி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு