மட்டக்களப்பு காத்தான்குடியில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களின் செயற்பாடு பற்றிய முன்னேற்ற அறிக்கை தொடர்பான கலந்துரையாடல், இன்று நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வி.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கலை இலக்கிய மன்றங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர்களுக்கான வேலை முன்னேற்ற அறிக்கை பற்றிய மீளாய்வு தொடர்பாகவும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களின் செயற்பாடு முன்னேற்ற அறிக்கை பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கலை இலக்கிய மன்றங்களின் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கலை இலக்கிய செயற்பாடுகள் பற்றியும் எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றியும் கலை இலக்கிய மன்றங்களின் பிரதி நிதிகளினால் இக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன. (சி)






