கம்பஹா மாவட்டம் வத்தளை வாழ் தமிழ் மக்கள் பயன்பெறுவதற்காக, முதலாவது தமிழ் இந்து தேசிய பாடசாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டி வைக்கப்பட்டுள்ளது.

வத்தளை தமிழ் மக்கள் பயன்பெறுவதற்காக இந்து தமிழ் தேசிய பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அருண்பிரசாத் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகரினால், வத்தளையில் புகையிரத வீதி ஹூனுப்பிட்டிய எனும் இடத்தில் அமைந்துள்ள சுமார் 95 பேர்ச்சஸ் காணி கல்வி அமைச்சுக்கு அன்பளிப்பு செய்யப்படும் நிகழ்வும், அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்;வும் தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசியகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மற்றும் வத்தளை மாபோலை மாநகரசபை உறுப்பினர்களான சசிகுமார், விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதலாம் தரத்தில் இருந்து வத்தளையில் செற்படும் தமிழ் மொழி மூல தேசிய பாடசாலையாக இப்பாடசாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
4 மாடி கட்டத்ததொகுதியாக அமைக்கப்படவுள்ள குறித்த பாடசாலைக்கு மொத்த மதிப்பீடு 8 கோடி ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், முதற்கட்ட ஒதுக்கீடாக 3 கோடி ரூபா அமைச்சர் மனோ கணேசனால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleயாழ் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா!
Next articleஹட்டனில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை!