அம்பாறை திருக்கோவில் நேருபுரம் ஷீரடிசாயி கருணாலயத்தில் கதிர்காம பாதயாத்திரியர்களுக்கு முதல் தடவையாக அன்னதாம் அளிக்கப்பட்டுள்ளன.

இவ் புண்ணிய நிகழ்வு ஷீரடிசாயி கருணாலயத்தின் ஸ்தாபகர் திருமதி சீத்தா விவே அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ற கருணாலயத்தின் நிருவாகிகளான் நேற்று புதன்கிழமை இரவு வேல்சாமி பாதயாத்திரியர் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டுள்ளன.

இவ் கதிர்காம பாதயாத்திரியை குழுவினர் கடந்த மே மாதம் 10ந் திகதி யாழ்பாணம் சந்நிதி ஆலயத்தில் இருந்து தமது பாத யாத்திரையை கதிர்காமத்தின் முருகன் ஆலயத்தினை நோக்கி ஆரம்பித்து இருந்த நிலையில் 41வது நாளான நேற்று புதன்கிழமை இரவு திருக்கோவில் நேருபுரம் ஷீரடிசாயி கருணாலயத்தினை வந்தடைந்தனர்.

இங்கு அடியார்கள் இறை நாமத்துடன் வரவேற்கப்பட்டு ஸீரடிசாயி கருணாலயத்தில் விசேட பஜனைகள் மற்றும் புஜை வழிபாடுகளைத் தொடர்ந்து முருக அடியார்களுக்கான அன்னதானம் கருணாலய நிருவாகிகளால் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் ஷீரடிசாயி கருணாலய உபதலைவர் எஸ்.பி.சீலன், செயலாளர் அன்டன், மற்றும் கருணாலய தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு கதிர்காம பாத யாத்திரியர்களுக்கான அன்னதானத்தினை அளித்திருந்தனர்.

Previous articleஈரான் மீது அமெரிக்கா கடுமையான தடைகள்
Next articleகல்வி அமைச்சருக்கு ஆணைக்குழு அழைப்பு