பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில், யானையால் பந்தல் போடும் சம்பிரதாய நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமான கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவம் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், நேற்றைய தினம் யானையால் பந்தல்போடும் சம்பிரதாய நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கதிர்காமம் தெட்டகமுவ பகுதியில் உள்ள மரக்குழைகளை, உற்சவத்தில் கலந்த கொண்ட யானைகள் எடுத்து வந்து கதிர்காம கந்தன் ஆலயத்திற்கு முன்பாக பந்தல் போடும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர். (நி)

Previous articleகிளிநொச்சி தொண்டமான் நகர் வீதி புனரமைப்பு
Next articleம.ம.முன்னணியில் இருந்து பிரிந்து செல்லமாட்டேன்:அனுசா சந்திரசேகரன்