கட்சியின் முடிவுக்கு அமைவாக தனது அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டு வரும் நோக்கில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து இருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(சே)

Previous articleபாகிஸ்தானுக்கு 5.97 பில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்!!!
Next articleக.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 5இல் ஆரம்பம்