கடன் இல்லாத நாட்டை ஏற்படுத்துவதே, தமது இலக்கு என, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய, வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில், கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக, வெளிப்படையாகவே வரவு செலவு திட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றேன்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய பிரச்சினையில் இருக்கின்றது.
அதனால், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, நாங்கள் தேவையான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
வெளிநாடுகளுக்கு வழங்க இருக்கும் அனைத்து டொலர்களையும், அடுத்த வருடத்துக்குள் வழங்குவோம்.
அதற்கான திட்டங்களை நாங்களை மேற்கொண்டிருக்கின்றோம்.
கடன் இல்லாத நாட்டை ஏற்படுத்துவதே, எமது இலக்கு.
கடன் இல்லாத நாட்டையே, நாங்கள் அடுத்து வரும் அரசாங்கத்துக்கு ஒப்படைப்போம்.
ஜனவரி மாதம் 500 மில்லியன் டொலர் வழங்கப்பட இருக்கின்றது.
ஜூலை மாதம் ஆயிரம் மில்லியன் டொலர் வழங்க இருக்கின்றோம்.
நாங்கள் பெற்றுக்கொண்ட கடன் தொகையும் இருக்கின்றது.
அனைத்தையும் அடுத்த வருடத்தில் வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
கடன் இல்லாத நாட்டை அடுத்த அரசிடம் ஒப்படைப்போம்!






