முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச, காணிப்பயன்பாட்டு குழுக்கூட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில், பல்வேறு தரப்பினரால் காணிக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அந்த காணியை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ள விசேட கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் த.அகிலன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள், காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது, காணி கோரிக்கைகள் விடுக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக, காணிகளை வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. (சி)

Previous articleபொகவந்தலாவ சென். மேரிஸ் மத்திய கல்லூரியில் கட்டடம் புனரமைப்பு
Next articleயாழ்பாணம் வலி வடக்கில் காணி விடுவிப்பு