முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச சபையின் காணி பயன்பாடு தொடர்பான சங்க கூட்டம் ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஷ; தலைமையில் நடைபெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற குறித்த கூட்டத்தில், பொது அமைப்புக்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு காணிகள் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
காணி தொடர்பான கலந்துரையாடலில் வனவள திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், காணி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)







