2023 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை தான் தொடர்ந்தும் விளையாடப்போவதாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் 212 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,673 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் 115 இலக்குகளையும் கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை, 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஏஞ்சலோ மேத்யூஸ் 5,554 ஓட்டங்களையும் 33 இலக்குகளையும் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் 32 வயதாகும் ஏஞ்சலோ மேத்யூஸின் ஓய்வு குறித்து சமூகவலைதளத்தில் கேள்விகள் எழுந்ததை அடுத்து, 2023 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை தான் தொடர்ந்தும் விளையாட எதிர்பார்த்துள்ளதாக ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியுள்ளார்.(நி)

Previous articleராஜபக்ச குடும்பத்துக்காக 19 ஆவது திருத்தத்தில் மாற்றம் : ராஜபக்ச
Next articleமீண்டும் இன்று சாட்சியம் வழங்கும் இராணுவ தளபதி